கருவிலேயே கலையாதவன்… 3,500 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரன்!- உலகையே வென்ற அதிசய மனிதன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோட்டக்கார தந்தைக்கும் வீட்டு வேலை செய்யும் தாய்க்கும் பிறந்தவன் இன்று உலகையே வென்ற அதிசய மனிதன் ஆகக்க் கொண்டாடப்படுகிறார். சிறு வயதில் ஒரு ஷூ கூட வாங்க வசதி இல்லாதவன் இன்று கால்பந்து உலகின் சாம்ராஜ்ய மன்னர் ஆகத் திகழ்கிறார். ஏழை குடிசை வீட்டில் இருந்து இன்று சிகரம் தொட்ட நாயகன் ஆக இருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

Advertising
>
Advertising

ரொனால்டோவின் தாய் அவரை கர்ப்பத்திலேயே கலைக்க நினைத்தாராம். ஆனால், இன்று தாயை மிகவும் நேசிக்கக்கூடிய ஒரு மனிதன் ஆக விளங்குகிறார் ரொனால்டோ. வெளிநாடுகளில் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பின்னர் பெற்றோர் உடன் சேர்ந்து வசிக்கும் பழக்கம் இல்லை. ஆனால், தன் மனைவி, குழந்தைகள் உடன் தாயையும் சேர்த்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் ரொனால்டோ.

இன்று 3,500 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர் ஆன ரொனால்டோ சிறு வயதில் சாப்பாட்டுக் கூட வழியில்லாத குடிசை வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார். அப்பா தோட்டக்காரர் ஆகவும் அம்மா வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஒரே ஒரு அறையில் அப்பா, அம்மா, ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள் உடன் வாழ்ந்து வந்திருக்கிறார் ரொனால்டோ.

ரொனால்டோவின் தந்தை, அமெரிக்காவின் 40-வது அதிபரும் நடிகருமான ரொனால்டோவின் நினைவாக தனது மகனுக்கு ரொனால்டோ எனப் பெயர் வைத்துள்ளார். ரொனால்டோவின் தந்தை குடிப்பழக்கத்தின் காரணமாக ரொனால்டோவின் 20-வது வயதில் இறந்துவிட்டார். அதனால், தன் வாழ்நாளிலேயே குடிக்கப் போவது இல்லை என முடிவு எடுத்துவிட்டார் ரொனால்டோ. அதிகமாக ரத்த தானம் செய்வதால் ரொனால்டோ உடம்பில் டாட்டூ குத்திக் கொள்ளப்போவது இல்லை என முடிவு எடுத்து வாழ்ந்து வருகிறார்.

சிறு வயதில் இருந்தே அதிகப்படியான குடும்பப் பொறுப்புகளை தன் தலை மீது சுமந்து வாழத் தொடங்கி உள்ளார் ரொனால்டோ. கால்பந்து விளையாட வேண்டும் என்ற ரொனால்டோவின் ஆசைக்காக 4 குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு ரொனால்டோவின் கால்பந்துக்காக பல வேலைகளை வாரத்தின் அனைத்து நாட்களிலும் செய்வாராம் அவரது தாய். அதனாலே தனது 4 குழந்தைகள், மனைவி உடன் தாயையும் சேர்த்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் ரொனால்டோ.

SUPERSTAR, CRISTIANO RONALDO, FOOTBALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்