WTC Final-ல் இவர் இல்லாம எப்படி..? நியூஸிலாந்து அணிக்கு வந்த புதிய பிரச்சனை.. கேப்டன் விளையாடுவதில் சிக்கல்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3-ம் தேதி தனி விமானம் மூலம் இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றனர். தற்போது அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்னும் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கேன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்ட் தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதுகுறித்து நியூஸிலாந்து அணி நிர்வாகம் வெளியிட்ட தகவலில், ‘கேன் வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவ குழு ஆராய்ந்து வருகின்றது. அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் மிட்செல் சான்ட்னருக்கும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது’ என நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேன் வில்லியம்சனை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘காயத்தின் தன்மை பெரிதாக இல்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் விளையாடும்போது வலி அதிகமாகும் பட்சத்தில் இது பெரிய பிரச்சனையாக மாறும்’ என அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த காயத்தின் வீரியம் அதிகமானால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவதில் சிக்கல் ஏற்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்