எடுத்த வீரரை 'கழட்டிவிட்டு'.. கழட்டிவிட்ட வீரரை 'திரும்ப' எடுத்த பிசிசிஐ.. 'இதுதான்' காரணமாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 அணியில் இருந்து ஓபனிங் பேட்ஸ்மேன் தவானை கழட்டிவிட்டு, கழட்டிவிட்ட இளம்வீரர் சஞ்சு சாம்சனை பிசிசிஐ மீண்டும் அணியில் எடுத்துள்ளது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்தது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காத பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்தனர். ரசிகர்களுடன் சேர்ந்து பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் சஞ்சுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தநிலையில் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் விளையாடிய தவான் காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதில் மாற்று வீரராக சஞ்சு சாம்சனை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் மட்டுமின்றி தவானின் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டும், மந்தமான பேட்டிங்கும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்வுக்குழுவினர் மீட்டிங்கிலும் தவானின் மோசமான பார்ம் குறித்து அலசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதே நிலை நீடித்தால் தவானுக்கு பதிலாக இளம்வீரர்கள் வாய்ப்பு பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

மறுபுறம் கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர் தொடர்ந்து ஆடும் 11 அணியில் இடம்பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்