‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ இறுதியாக விளக்கம் அளித்துள்ள விராட் கோலி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ள விராட் கோலி இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு இறுதியாக விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இந்திய அணிக்குள் வீரர்கள் இரண்டு கோஷ்டியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள தொடருக்கு தற்போது கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுடன் கருத்துவேறுபாடு என்ற செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளியாகும்போது ஒரு வீரராகவும், அணியாகவும் குழப்பம் ஏற்படுகிறது. இது நம்பமுடியாததாக உள்ளது. அணிக்குள் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் எப்படி எங்களால் சீராக விளையாடி வர முடியும்? 7வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளோம். அணியில் சகோதரத்துவமும், நட்பும் இல்லையென்றால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது.
நான் ஒரு நபர் பற்றி பாதுகாப்பாக உணரவில்லை என்றால் அது என் முகத்திலேயே தெரிந்துவிடும். என்னுடைய நடத்தையிலேயே அதைப் புரிந்து கொள்ள முடியும். நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரோஹித்தைப் பாராட்டியுள்ளேன். ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு ஒரு சிறந்த வீரர்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யாரக் கேட்டு கேப்டனா இருக்காரு..?’ எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான்.. விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..
- இவங்க ரெண்டுபேரோட சண்டைக்கு இதுதான் காரணமா..? கசிந்த தகவல்..!
- ‘தோனியின் நாட்டுப்பற்றுக்கு’.. ‘சல்யூட்’ அடிக்க வைக்கும் காட்ரெலின் வைரல் ட்வீட்..
- ‘நல்லா ஆடினாலும், தொடர்ந்து வாய்ப்பு தரலனா’... 'அது நல்லது அல்ல'... 'இளம் வீரர் உருக்கம்'!
- 'அப்படின்னா..'.. டக்குன்னு நான் செலக்ட் பண்றது இவராதான் இருப்பார்.. அப்புறம் இவங்கல்லாம்!
- செய்தியாளர்களை சந்திக்க மறுக்கும் வீரர்?... இதுதான் காரணமா?
- ‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..
- ‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..
- ‘என்ன நடக்கிறது அணியில்..?’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..
- இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’