‘முறைதவறவில்லை’ என திட்டவட்டமாக மறுத்தும்.. ‘பிரபல வீரர் மீது ஐசிசி எடுத்துள்ள நடவடிக்கை..’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியின் நடுவில் மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறையில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2வது போட்டியில் நடுவரின் உத்தரவுகளை மீறிச் செயல்பட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரன் பொலார்ட் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போட்டி நடந்து கொண்டிருக்கும்போது பொலார்ட் நடுவர் அனுமதியின்றி ஒரு மாற்று வீரரைக் களத்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. வழக்கமாக மாற்று வீரரை அழைக்க வேண்டுமென்றால் நடுவரிடம் முதலில் வேண்டுகோள் வைக்க வேண்டும். அவர் அனுமதித்த பிறகே மாற்று வீரரைக் களத்துக்கு அழைக்க வேண்டும். ஆனால் நடுவர் அடுத்த ஓவர் முடியும் வரை காத்திருக்குமாறு பலமுறை கூறியும் பொலார்ட் அதற்கு கீழ்ப்படிய மறுத்து, தொடர்ந்து மாற்று வீரரை அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பொலார்ட் தவறிழைத்தது நிரூபணமாகவே அவருக்கு ஆட்டத்தொகையில் 20% அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 24 மாத காலத்திற்குள் பொலார்ட் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றால் அது நீக்கப்புள்ளியாகக் கருதப்பட்டு அவர் ஓரிரு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம். ஆனால் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என பொலார்ட் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- போட்டியின் இடையில் ‘இந்திய வீரர் செய்த காரியம்’.. ‘தவறை ஒப்புக்கொண்டதால்..’ ஐசிசி எடுத்துள்ள நடவடிக்கை..
- ‘பந்துவீசும் முன்பே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..’ தேர்வுக்குழுவை வறுத்தெடுத்த பிரபல வீரர்..
- கண்டிப்பா வருவேன்.. ‘ரகசிய ஆசையை உடைத்த பிரபல வீரர்..’ உற்சாகத்தில் ரசிகர்கள்..
- ட்விட்டரில் பதிவிட்ட ஃபோட்டோவால்.. ‘மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி..’
- அவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’
- ‘அவர் மீண்டும் வலிமையுடன் ஃபார்முக்கு வருவார்..’ பிரபல வீரர் குறித்து விராட் கோலி நம்பிக்கை..
- ‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ இறுதியாக விளக்கம் அளித்துள்ள விராட் கோலி..
- ‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..
- ‘என்ன நடக்கிறது அணியில்..?’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..
- ‘அவுட் ஆகாமலேயே வெளியேறிய இந்திய வீரர்..’ அம்பயரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..