'தம்பி' உண்மையிலேயே நீங்க பவுலர் தானா?... 'வெறித்தனம்' காட்டிய இளம்வீரர்... தெறிக்க விடும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில் புனேவில் இன்று இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தவான், ராகுல் இருவரும் இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்தனர். இந்திய அணி 10.5 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்த போது தவான்(52) அவுட் ஆனார். தொடர்ந்து 3-வதாக இறங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து 2-வது பந்தில் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 11.3 ஓவர்களில் 106 ஆக இருந்தது.

12.3 ஓவரில் இந்திய அணி 118 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் 54 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி(26) 17.3 ஓவரில் இந்திய அணி 164 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். கோலியை அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர்(0) ரன்கள் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணியின் ரன்ரேட் மிகவும் குறைந்தது.

எனினும் ஷர்துல் தாகூர் 8 பந்துகளில் 22 ரன்களும், மனிஷ் பாண்டே 34 ரன்களும் கடைசிக்கட்டத்தில் குவிந்ததால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் ஷர்துல் தாகூர் தற்போது ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறார்.

2-வதாக களமிறங்கிய இலங்கை அணி  3.1 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்