அரைசதம் அடித்த மயங்க்... சொதப்பிய புஜாரா..! INDvsSA முதல் டெஸ்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்வதாகத் தேர்வு செய்து ஆடி வருகிறது.

அரைசதம் அடித்த மயங்க்... சொதப்பிய புஜாரா..! INDvsSA முதல் டெஸ்ட்!
Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளது. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கிறது.

INDvsSA 1st day test match begins with india opting batting

முதலில் டெஸ்ட் தொடர் இன்று தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று 26-ம் தேதி, செஞ்சூரியனில் நடக்கத் தொடங்கி உள்ளது. இதற்காக இந்திய அணி தீவிரப் பயிற்சி எடுத்து வந்தது. குறிப்பாக தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, இதுவரை ஒரேயொரு டெஸ்ட் தொடரில் கூட வெற்றி பெற்றதில்லை. இந்த முறை அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றப் பார்க்கும்.

INDvsSA 1st day test match begins with india opting batting

இன்றைய முதல் நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்வதாகத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் கொண்ட அணி இன்று களம் இறங்கி உள்ளது.

இந்திய அணி விக்கெட் இழப்பு இன்று 100 ரன்கள் மயங்க்- கே.எல்.ராகுல் கூட்டணியில் எடுக்கப்பட்டது.  விக்கெட் இழப்பு இன்றி இந்திய அணி 100 ரன்கள் எடுத்தது இது 3-வது முறை ஆகும். முதல் விக்கெட் ஆக மயங்க் அகர்வால் அரை சதம் கடந்து 60 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாகக் களம் இறங்கிய புஜாரா வந்ததும் டக்-அவுட் ஆனார்.

தற்போதைய சூழலில் இந்திய அணி 47.2 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் தற்போது அரை சதம் கடந்துள்ளார்.

CRICKET, INDVSSA, PUJARA, MAYANK AGARWAL, புஜாரா, மயங்க் அகர்வால்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்