‘நம்பிக்கையுடன்’ சொன்ன கேப்டன்... ‘அடுத்த’ நாளே பயிற்சியைத் ‘தவறவிட்ட’ இளம்வீரர்... 2வது டெஸ்ட்டில் யாருக்கு ‘வாய்ப்பு?’...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா சொதப்ப, அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கே வாய்ப்பு என கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். மேலும் அவர் விளையாடத் தொடங்கிவிட்டால் ஆட்டமே வேறு, அதற்கு அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோலி கூறியிருந்தார்.
இந்நிலையில் இடது காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக பிரித்வி ஷா வியாழக்கிழமை பயிற்சியை தவறவிட்டுள்ளார். 2வது டெஸ்ட் போட்டி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இது இந்திய அணியினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், பிரித்வி ஷாவுக்கு வியாழக்கிழமை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வீக்கத்துக்கான காரணம் கண்டறியப்படவுள்ளதாவும், முடிவு சாதகமாக வந்தால் வெள்ளிக்கிழமை அவர் பயிற்சியில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவரால் விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வாலுடன் இணைந்து ஷுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்’... ‘சறுக்கிய இந்திய வீரர்கள்’... ‘டாப் 10 பவுலர்களில்’... ‘ஒரே ஒரு முன்னணி இந்திய வீரர்’!
- என்னை மீறி ‘எப்படி’ போகுதுனு பாக்கறேன்... ‘அவுட்’ ஆகாமல் இருக்க வீரர் செய்த ‘வேடிக்கை’ முயற்சியால்... வைரலாகப் பரவும் ‘வீடியோ’...
- அவர்கிட்ட மாட்டினா ‘துவம்சம்’ தான்... அதுக்கப்பறம் ‘ஆட்டமே’ வேற... மாத்துறதா எல்லாம் ‘ஐடியா' இல்ல... கோலி ‘திட்டவட்டம்’...
- 'இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல'... இந்திய வீரர்களை 'வறுத்தெடுத்த' ரசிகர்கள்... 'நல்லா' ஆடுனவங்களுக்கே 'இந்த' நெலமையா?
- ‘அத’ மட்டும் பண்ணியிருந்தா ஜெயிச்சிருக்கலாம் ஆனா... இதயங்களை ‘வென்ற’ பவுலரின் செயல்... ‘வைரலாகும்’ வீடியோ...
- ‘இப்டி டீமை மாத்திட்டே இருந்தா’... ‘அப்புறம் எப்படி இருக்கும்’... ‘ஏன் அந்த வீரரை எடுக்கல’... ‘வறுத்தெடுத்த முன்னாள் கேப்டன்’!
- VIDEO: ‘யாருப்பா இந்த இளம் புயல்’... ‘29 பந்துகளில், 10 விக்கெட்டுகளை’... ‘ஒரே ஆளாக வீழ்த்தி’... ‘திரும்பி பார்க்க வைத்த கேப்டன்’!
- 'அவர்' மட்டும் இல்லன்னா... மானம் 'கப்பலேறி' இருக்கும்... 'சின்னப்பையனை' புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
- ‘சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்’.. ‘7 வருடம் விளையாட தடை’.. ஐசிசி அதிரடி..!
- 'ஐபிஎல் போட்டிக்கு’... ‘முன்னதாக நடக்கும் டி20 போட்டியில்’... ‘ஆசியா லெவன் அணியில் 6 இந்திய வீரர்கள்'... யார் யார் தெரியுமா?