VIDEO: "அது நிச்சயம் 'அவுட்' தான்... தேர்ட் அம்பயரும் தப்பு பண்ணிட்டார்!" - சர்ச்சைக்குள்ளான ரன் அவுட்... அம்பயர்களை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வரும் நிலையில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதற்கு இந்திய அணியின் சிறப்பான பவுலிங் மற்றும் பீல்டிங் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பும்ரா 4 விக்கெட் எடுக்க, இன்னொரு பக்கம் அஸ்வின் 3 விக்கெட் எடுத்துள்ளார். அறிமுக வீரர் சிராஜும் 2 விக்கெட் எடுக்க, ஜடேஜா கடைசி விக்கெட்டை எடுத்துள்ளார். ஆனால் இந்த போட்டியில் நடுவர்கள் சிறப்பாக செயல்படாதது, தவறான முடிவுகளை அடுத்தடுத்து வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிராஜ் ஓவரில் மார்னஸ் எல்பிடபிள்யூ ஆகி இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. அம்பயர்ஸ் கால் என்பதால் டிஆர்எஸ்ஸிலும் இதற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை. இதேபோல இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் அஸ்வின் வீசிய 55வது ஓவரில் ரன் அவுட் ஆக, அதற்கு நடுவர் ரன் அவுட் கொடுக்கவில்லை. மூன்றாவது நடுவரும் இதற்கு ரன் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் இது ரன் அவுட்தான் என்பது ரீப்ளேவின் போது உறுதியாகியுள்ளது.

டிம் பெயின் கோட்டை தாண்டாமல், கோட்டின் மீது பேட்டை வைக்கும் போது ரிஷப் பந்த் அவரை ரன் அவுட் செய்துள்ளார். ஆனால் இதை சரியாக ஆய்வு செய்யாமல் மூன்றாவது நடுவர் விக்கெட் இல்லை எனக் கூறியுள்ளார். நடுவரின் இந்த தவறான முடிவை பார்த்த ரஹானே வேகமாக சென்று நடுவரிடம் கேட்ட போதும், ரன் அவுட் கொடுக்கப்படவில்லை. இதுபற்றி இன்னும் சில இந்திய வீரர்களும் கூட நடுவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து இன்று களத்தில் நடுவர்கள் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்