'50 ஆண்டுகளில் முதல்முறை!!!'... 'அறிமுக போட்டியிலேயே அசத்தல் சாதனையுடன்'... 'ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த இந்திய பவுலர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே முகமது சிராஜ்  சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானேவால் அபாரமாகப் பயன்படுத்தப்பட்ட அறிமுக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் சிராஜ்  பெற்றுள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் உணவு இடைவேளைக்குப்பின் 27 ஓவர்கள் கழித்துக் களமிறக்கப்பட்ட முகமது சிராஜ் கிடைத்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தி தன் 5 விக்கெட்டுகள் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சிராஜ் மொத்தமாக 77 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் முக்கியமான சமயத்தில் சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இதன்முலம் உலக அளவில் ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 4வது பவுலராக சிராஜ் சாதனை படைத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த சிராஜ் இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றதால் தன் தந்தையின் மரணத்துக்கு வர முடியாமல் போன நிலையில், கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளில் அறிமுக போட்டியில் ஆஸ்திரேலியாவில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் விவரம்

இங்கிலாந்தின் பில் டிஃப்ரெய்டாஸ் - 5/95 - 1986-87 ஆஷஸ் தொடர்

இங்கிலாந்தின் அலெக்ஸ் டியூடர் - 5/108 - 1998-1999 தொடர்

இலங்கையின் லஷித் மலிங்கா - 6/94 - 2004 தொடர்

இந்தியாவின் முகமது சிராஜ் - 5/77 - 2020

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்