"இனிதான் நடராஜனுக்கு சிக்கலே இருக்கு... இதுல மட்டும் கவனமா இல்லன்னா"... 'குவியும் பாராட்டுகளுக்கு நடுவே'... 'எச்சரித்துள்ள சேவாக்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடராஜன் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமெனவும், இனிதான் அவருக்கு சிக்கல் ஏற்படுமெனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் எச்சரித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி கலக்கியதை தொடர்ந்து தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜன் சர்வதேச அரங்கிலும் தொடர் பாராட்டுகளை குவித்து வருகிறார். இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் நடராஜன் சேருவதற்கு முக்கிய காரணமாக இருந்த சேவாக் நடராஜனை எச்சரித்து முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், "நடராஜன்  சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவர் இதுபோல வேகமாக முன்னேற முன்னேற இனி அவருக்கு பிரச்சனையும் அதிகரிக்கும். நடராஜன் அதற்கு தயாராக இருக்க வேண்டும். அவர் தொடர்ந்து அனைத்தையும் கற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் எதிரணிக்கு சவாலான வீரராக அவர் தொடர முடியும். அதாவது வரும் நாட்களில் இவர் பவுலிங் எப்படி என்று மற்ற வீரர்களுக்கு புரியும். அப்போதுதான் நடராஜனுக்கு சிக்கல் ஏற்படும்.

அதனால் அதற்குள் நடராஜன் பல புதிய விஷயங்களை கற்கவேண்டும். புதிய புதிய திட்டங்களை நடராஜன் வகுத்துக் கொண்டே இருக்கும்போதுதான் அவர் நிலைக்க முடியும். ஜாகீர் கான், நெஹ்ரா போன்ற இடது கை பந்து வீச்சாளர்கள் உடன் நடராஜன் நேரம் செலவழிக்க வேண்டும். அதன் மூலம் அவர் புதிய விஷயங்களை கற்க முடியும். ஜாகீர் கான், நெஹ்ரா போன்றவர்கள் கற்றுக்கொண்ட விஷயம் நடராஜனுக்கு சிறந்த பாடமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்