'இதுதான் அவருக்கு கடைசி போட்டியா???'... 'இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே?!!'... 'கோரிக்கை வைத்த பிரபல வீரர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி வீரர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் போட்டிதான் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் இருக்குமெனக் கூறப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், மிக மோசமான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் விளையாடிய விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து பல முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் குறிப்பாக, இந்திய அணி வீரர் விர்த்திமான் சாகாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் போட்டி தான் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்குமெனக் கூறப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் அவர் இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை எனவும், அதேபோல இனி நடக்க உள்ள டெஸ்ட் தொடர்களிலும் அவரை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அவருடைய வயது மற்றும் டெஸ்ட் இன்னிங்ஸ் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.

அதோடு இந்திய டெஸ்ட் அணியில் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்ய கே.எல் ராகுல், ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் உள்ளதால், டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடும் சாகாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு இனி வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. இதனால் சாகா இனி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விர்த்திமான் சாகா குறித்து பேசியுள்ள பிரக்யான் ஓஜா, "ரிஷப் பந்தின் பேட்டிங் காரணமாக நான் முதல் டெஸ்ட்டின்போது அவருக்கு ஆதரவளித்தேன். அது பிங்க் பந்து என்பதால் ரிஷப் விளையாடியிருந்தால், அவர் முக்கியமான ரன்களைப் பெறுவார் என நான் நினைத்தேன். ஆனால் இப்போது நீங்கள் 36 வயதான சாகாவைப் பற்றி பேசுகிறீர்கள். அவர் இப்போது 1 டெஸ்ட் விளையாடியுள்ளார். அவர் இந்த அணியில் இருந்து வெளியேறினால் அவருக்கு யு-டர்ன் இல்லை. எனவே அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்