'மோசமான' சாதனை... 39 ஆண்டுகளாக இந்தியாவைத் 'துரத்தும்' சோகம்... 2 பேர் மட்டும் 'கிரேட்' எஸ்கேப்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர ஒருசில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய கேப்டன்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோருடன் விராட் கோலியும் இணைந்துள்ளார்.

இந்த பட்டியலில் கேப்டனாக கபில்தேவ், தோனி இருவரும் இடம் பிடிக்கவில்லை. அதேநேரம் அவர்கள் இருவரும் இந்திய நாட்டுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர்கள் என்பதையும் ரசிகர்கள் பகிரத் தவறவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்