'ப்ரித்வி ஷாவ மட்டும் தூக்கிடாதீங்க... அடுத்த போட்டிக்கு அவரு டீம்ல இருக்கணும்?!!'... 'ஆஸ்திரேலிய ஜாம்பவான் சொல்லும் காரணம்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இந்திய வீரர் ப்ரித்வி ஷாவிற்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் 56 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, வெறும் 36 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய வீரர்கள்மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், குறிப்பாக இளம் வீரர் ப்ரித்வி ஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் வந்ததும் வெளியேறிய ப்ரித்வி ஷாவிற்கு அடுத்தடுத்த போட்டிகளில் இடம் கொடுக்க கூடாது என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு மாறாக பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி ப்ரித்வி ஷாவிற்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மைக் ஹசி, "இந்திய அணி தேர்வாளர்கள் பிரித்வி ஷா மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு டெஸ்ட்டில், அதுவும் தரமான பவுலிங் யூனிட்டிற்கு எதிராக சரியாக ஆடாததற்கெல்லாம் அவரை அணியிலிருந்து நீக்கக்கூடாது.

முதல் தர கிரிக்கெட்டில் 7க்கும் குறைவான சராசரியை வைத்துள்ள ஜோ பர்ன்ஸ் மீது ஆஸி. அணி தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்து அவரை அணியில் எடுத்து தொடக்க வீரராக இறக்கிவிட்டனர். முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை என்றாலும், 2வது இன்னிங்ஸில் பர்ன்ஸ் அரைசதம் அடித்தார். எனவே பிரித்வி ஷா மீது நம்பிக்கை வைத்து, இந்திய அணி தேர்வாளர்கள் அடுத்த போட்டியிலும் அவரையே ஆடவைக்க வேண்டும். இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள மெல்போர்ன் ஆடுகளம் பிரித்வி ஷாவுக்கு பொருத்தமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்