Video: நம்பி 'மேட்சுல' எடுத்ததுக்கு... உன்னால என்ன 'பண்ண' முடியுமோ... அத பண்ணிட்ட ராசா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான்(96), விராட் கோலி(78) கே.எல்.ராகுல் (80) ஆகியோர் அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 341 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே வார்னர் (15) விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து ஆரோன் பிஞ்ச்(33), ஸ்டீவ் ஸ்மித்(98) என முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து தடுமாற ஆரம்பித்தது. முடிவில் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய இழக்க, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆரம்பத்தில் நிதானமாக பேட்டிங் செய்து இலக்கை நோக்கி முன்னேறிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இரட்டை செக் வைத்தார். 18 ரன்களில் அலெக்ஸ் கேரியையும், 98 ரன்களில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தையும் ஒருசேர அனுப்பி வைத்தார். 2 விக்கெட்டுகள் எடுத்ததன் வழியாக ஒருநாள் தொடரில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்து, மேலும் ஒரு சாதனையையும் படைத்தார். இதையடுத்து சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கமின்ஸ் பவுன்சரினால் 'கன்கஷன்'... புதிய விக்கெட் கீப்பர்.... 'அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால்...' பிசிசிஐ புதிய அறிவிப்பு...!
- 15 ஆண்டுகளில் 'முதல்முறை'... தோனியை அதிரடியாக 'நீக்கியதற்கு' காரணம் இதுதானாம்... 'கசிந்த' ரகசியம்!
- நான் கொஞ்சம் பம்முனா...! 'லெக் ஸ்பின்ல' கொஞ்சம் தடுமாறுவார்...அடுத்த மேட்ச்ல வேற ஒரு ப்ளான் இருக்கு...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- புவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ!
- இதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...!
- ‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட பட்டியல்... தோனியின் எதிர்காலம்?... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை!
- நீ எதிர்காலத்துல இந்தியாவுக்காக விளையாடுவ...! பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாமே சூப்பர் .. கலக்கல் ஸ்மார்ட்பாய்...!
- 'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'?... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!