‘வாழ்வின் முக்கியமான தருணம் அது’... ‘அதனால அவர் ஊருக்கு திரும்புவதை மதிக்கிறேன்’... ‘ஆனாலும் இந்திய அணிக்கு பின்னடைவு தான்’... ‘ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் கருத்து’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு, இந்திய அணி கேப்டன் நாடு திரும்புவது, அந்த அணிக்கு பாதிப்பாக அமையும் என்று ஆஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், முதல்முறையாக இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆடவில்லை. இந்த முறை அவர்கள் ஆடுவதால், டெஸ்ட் தொடர் மிகக்கடுமையான போட்டியாக அமையும். ஆனால் இந்த முறை விராட் கோலி, முழு தொடரிலும் ஆடவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்கவிருப்பதால், 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளதாவது, ‘விராட் கோலியை பல காரணங்களுக்காக என் வாழ்க்கையில் நான் கண்ட சிறந்த வீரராக கருதுகிறேன். அதற்கு அவருடைய பேட்டிங் மட்டும் காரணமல்ல. இவருடைய ஆற்றல், உத்வேகம், கிரிக்கெட் மீதான வெறி என பல காரணங்கள் இருக்கின்றன.

தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக விராட் கோலி இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதற்காகவும் அவர் மீது அதிக மரியாதை கொள்கிறேன். நம் அனைவரையும் போலவே அவரும் ஒரு மனிதர். எனது வீரர்களுக்குக்கூட நான் அறிவுரை வழங்கியுள்ளேன். அப்போது அவர்களிடம் குழந்தைகளின் பிறப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள் என்று நான் எப்போதும் கூறுவேன்.

ஏனென்றால் இது நீங்கள் செய்யும் மிகச்சிறந்த காரியங்களில் ஒன்றாகும். மேலும், ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான தருணம். விராட் கோலி இல்லாததால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். அதேநேரத்தில் கடந்த முறை இந்திய அணி எங்கள் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியயுள்ளது. அதனால் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்