ஆஸ்திரேலியாவ 'ஜெயிச்சதெல்லாம்' சரிதான்... ஆனா இந்த ஒரு விஷயத்தை... 'நோட்' பண்ணீங்களா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதலாவது ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு இன்று நடந்த போட்டியில் இந்தியா பழிதீர்த்துக் கொண்டது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து 340 ரன்களை குவித்தது. இதையடுத்து 2-வதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று 1-1 என சமநிலை வகிக்கின்றன. இதனால் அடுத்து 19-ம் தேதி நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. அதேபோல இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதேபோல தோல்வியைத் தடுமாறியது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்