"இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க... இப்படித்தான் நிறைய திறமையானவர்கள இழந்திருக்கோம்"... 'இளம்வீரருக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இளம் வீரரான சுப்மன் கில் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் மற்றும் துவக்க வீரர் பிரித்திவி ஷாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஆகியோர் அணிக்கு அறிமுகமாயினர். முதல் போட்டியில் இந்திய அணி அடைந்த மோசமான தோல்விக்கு பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், இளம் வீரரான சுப்மன் கில் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் இன்னிங்சில் அரைசதத்தை தவறவிட்டபோதும், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இதையடுத்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பல இந்திய முன்னாள் வீரர்களோடு ஒப்பிட்டு பேசி வரும் நிலையில், அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என கில்லுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், "சுப்மன் கில் ஒரு தனிச்சிறப்புமிக்க வீரர். அவரை அவருடைய ஆட்டத்தை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவரை அனுபவித்து விளையாட விடுங்கள். அப்பொழுதுதான் அவர் சிறப்பாக விளையாட முடியும். மேலும் யாருடனாவது அவரை ஒப்பிட்டு பேசினால் அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். அவர் முன்னாள் வீரர் யாரும் கிடையாது. அவர் முதல் சுப்மன் கில் அவ்வளவுதான், அதுமட்டும்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வழக்கத்திற்கு மாறான அதிக எதிர்பார்ப்பினால் திறமை படைத்த பல வீரர்களை நாம் இழந்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்