‘இந்தப் போட்டிக்கே முக்கியத்துவம்’???... ‘வழக்கத்துக்கு மாறாக’... ‘பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்’... ‘வெளியான முக்கிய தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முதலில் விளையாட இருந்தாலும், கடைசியாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் முடிந்ததும், துபாயில் இருந்து இந்திய அணி நேரடியாக ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க சிட்னி நகருக்கு சென்றது. அங்கே கொரோனா பரிசோதனை மேற்கொண்ட இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில், 3 வடிவ தொடர்களுக்கான அணியில் இடம்பிடித்துள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்.
வழக்கத்துக்கு மாறாக வலைப்பயிற்சியை தவிர்த்து, மைதானத்தின் மைய ஆடுகளத்தில் சிவப்பு மற்றும் பிங்க் நிற பந்துகளைக் கொண்டு, அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், நான் ஸ்டிரைக்கர் பகுதியில் ஒரு பேட்ஸ்மேனையும் வைத்து பயிற்சி செய்தனர். கொரோனாவால் இந்திய அணி வீரர்கள், கடந்த பல மாதங்களாக எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளாமல், கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடினர்.
இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியைத் தவிர்த்து டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தக்கவைத்துக்கொண்டு, கோப்பையை வெல்வதற்கு, தற்போது வரும் 4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு அடுத்ததாக வரும் 4 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறிப்பிடத்தக்க அளவில் வென்றே ஆக வேண்டும்.
இதன் காரணமாகவும், டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய வீரர்களுக்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையில் ஆட நீண்ட பயிற்சி அவசியம் என்பதால், தற்போது அனைத்து வீரர்களையுமே, டெஸ்ட் போட்டியின் பயிற்சியில் ஈடுபடுத்தலாம் என்று கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி திட்டம் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
இதற்குத் தான் இந்திய அணியில் மூன்று அணிகளையும் சேர்த்து 24 வீரர்களுக்கும் மேல் இருக்குமாறு பார்த்து அணித் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், இந்திய வீரர்கள் தங்களுக்குள்ளே இரு அணிகளை பிரித்துக் கொண்டு பயிற்சி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எதிர்பார்த்தத விட பயங்கரமா இருக்காரு'!.. வாயடைத்துப் போன ஜாம்பவான்கள்!.. இந்திய அணியில் இருக்கும் சிக்கல்!.. யார்க்கர் கிங் நட்டுவை வைத்து 'மெகா பிளான்'!
- ‘இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து’... ‘ஆஸ்திரேலிய முக்கிய வீரர் விலகல்’... ‘விராட் கோலி போலவே விருப்பம்’...!!!
- "தோனி, ரெய்னாவுக்கு நன்றி!!!"... 'அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்'... 'முன்னாள் சிஎஸ்கே வீரர் திடீர் ஒய்வு!'...
- ‘திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘மூடப்பட்ட எல்லைகள்’... ‘விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வீரர்கள்’... ‘முதல் ‘டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறுமா??’... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதில்’...!!!
- ‘இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் இனி இவங்கதான்’... ‘பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு’... ‘ஆஸ்திரேலிய தொடரில் புதிய ஜெர்ஸி மாற வாய்ப்பு’...!!!
- ‘இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக’... ‘முன்னாள் நட்சத்திர வீரர் தேர்வாக வாய்ப்பு’... ‘வெளியான புதிய தகவல்’...!!!
- 'அப்போ அதெல்லாமே உண்மைதானா?!!'... 'மீண்டும் வெடித்த சர்ச்சை!!!'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!'...
- ‘காயத்தில் இருந்து சீனியர் நட்சத்திர வீரர்’... சீக்கிரமே தேறிடுவாரு’... ‘பிசிசிஐ-க்கு நம்பிக்கை அளித்த தகவல்’... ‘ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க வாய்ப்பு’...!!!
- 'என்னது!... இனி டீமுக்கு 13 Players-ஆ???'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி?!!... 'ஏடாகூடமாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!!!'...
- "இந்நேரம் நான் 'கிரிக்கெட்' ஆடிட்டு இருந்துருக்கணும்... ஆனா நான் இப்போ..." கொரோனாவால் தலைகீழான 'இளம்' வீரரின் வாழ்க்கை,,.. கலங்கிய 'ரசிகர்'கள்!!!