‘கடந்த 4-5 வருசத்துல இந்தியா விளையாடுன மோசமான மேட்ச் அதுதான்’.. கோலியை மறுபடியும் மறைமுகமாக சாடிய கங்குலி.. கிளம்பியது புது சர்ச்சை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியின் செயல்பாடு குறித்து கங்குலி மறைமுகமாக கூறிய பதில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் திடீரென ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். பிசிசிஐயின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முன்னதாக பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, டி20 உலகக்கோப்பை முன்பே டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் வலியுறுத்தியதாக கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய விராட் கோலி தென் ஆப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே தான் ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து தன்னிடம் கூறியதாகவும், டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும்போது யாரும் விலக வேண்டாம் என கூறவில்லை என்றும் விராட் கோலி கூறினார். இந்த விவகாரத்தில் இருவரின் கருத்தும் முரணாக உள்ளதால், தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இப்போது கூறினாலும் சரியாக இருக்காது. இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ தக்க நேரத்தில் விளக்கம் கொடுக்கும்’ எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதற்கு முழு தகுதி உடையவர். அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதேபோல் சமீபத்தில் இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்று கொடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் அவரிடமிருந்து இதுபோன்ற நிறைய சாதனைகளை எதிர்பார்க்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் சரியாக அமையாததால் அந்த தொடர்களில் இருந்து வெளியேற நேர்ந்தது. ஆனால் நடப்பு ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சொதப்பியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

கடந்த 4-5 ஆண்டுகளில் இந்தியா விளையாடிய மிக மோசமான ஆட்டம் இதுதான். வீரர்கள் சுதந்திரமாக விளையாடாததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். அவர்கள் 15 சதவீத நம்பிக்கையுடன் மட்டும்தான் விளையாடி உள்ளனர்’ என கங்குலி கூறியுள்ளார் இதன் மூலம் விராட் கோலி வீரர்களை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என மறைமுகமாக சாடியுள்ளார். இது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்