இந்தியாவின் முதல் ‘பெண்’ கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்.. கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திர நாயுடு உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகள் சந்திர நாயுடு. இவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் தனது தந்தை சி.கே. நாயுடு குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே சந்திர நாயுடு கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வமாக விளையாடியுள்ளார்.

கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டிய சந்திர நாயுடு, இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனார். இவரது பெயரில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சந்திர நாயுடு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று தனது 88-வது வயதில் சந்திர நாயுடு காலமானார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்