‘தொடங்குறதும் முடிக்கிறதும் நாமளாதான் இருக்கணும்…’!- ‘சிஎஸ்கே’ வீரருக்கு ‘தல’ சொன்ன அட்வைஸ்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ள இளம் வீரர் ஒருவர் தனக்கு தோனி கொடுத்த அட்வைஸ்தான் தன்னுடைய ஆட்ட நுணுக்கத்தை மேம்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. இதில் டி20 அணியில் முதன் முறையாக 24 வயதான இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் விளையாடி வந்த கெய்க்வாட்-க்கு தற்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. நவம்பர் 17-ம் தேதி முதல் தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் கெய்க்வாட் விளையாடுகிறார்.

தொடக்க ஆட்டக்காரர் ஆகவே இறங்கும் கெய்க்வாட் இந்திய அணியில் தான் எத்தனையாவது ஆளாக களம் இறங்கப் போகிறோம் என்பது குறித்து பெரிதாக யோசிக்கவில்லை என்றே கூறியுள்ளார். காரணம், இந்த டி20-க்கான இந்திய அணியில் மொத்தம் 5 பேர் தொடக்க ஆட்டக்காரர்களாகவே உள்ளனர். இதுகுறித்து கெய்க்வாட் கூறுகையில், “எத்தனையாவது பேட்ஸ்மேன் ஆகக் களம் இறங்குவேன் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஒரு நல்ல விளையாட்டு வீரராக எதற்கும் என்னை தயார் செய்து கொள்வேன். என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பவையின் மேல் மட்டுமே நான் கவனம் செலுத்துவேன்.

எனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் நன்றாக விளையாட வேண்டும். இவை எல்லாம் பல வகை நுணுக்கங்களில் அடங்கி உள்ளது. அதனால், நான் பெரிதாக யோசிக்கமாட்டேன். ஆட்டத்தின் போது ஆட்டத்தை முடிக்க வேண்டும் என நினைப்பேன். அந்த மனநிலையில் இருந்தே பழகிவிட்டது. மொத்தத்தில் நான் எப்பொழுதும் எதையும் எளிமையாக வைத்துக்கொள்ளவே விரும்புவேன். மைதானத்தில் சூழல்களுக்குத் தகுந்தவாறு எனது பேட்டிங்கை மாற்றிக்கொள்வேன்.

என்னுடைய சில ஆட்டங்களின் போது தோனி என்னிடம் வந்து ஆட்டம் என் கையில் இருக்கும் போது முயற்சி செய்து அதை முடிக்க வேண்டும் எனக் கூறுவார். ஒரு தொடக்க ஆட்டக்காரர் என்றால் 10 அல்லது 12 ஓவர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பது இல்லை. முழு ஆட்டத்தையும் தொடக்க வீரர் முடிக்க முடியும் என தோனி கூறுவார். நான் அதைத் தான் எப்போதும் பின்பற்றுவேன் என அவரிடம் சொன்னேன்” என்றார்.

CRICKET, RUTURAJ GAIKWAD, MS DHONI, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்