மகளின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை எல்லாம் விற்ற அப்பா.. இந்தியாவையே பெருமைப்பட வச்ச மகள்.. நெகிழ்ச்சி பின்னணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வென்று சாதனை படைத்திருக்கிறது. இதில் இறுதி போட்டியில் முக்கிய நேரத்தில் சிறப்பாக விளையாடிய கங்கோடி திரிஷா ரெட்டி-க்கு எப்போதும் உறுதுணையாக இருந்திருக்கிறார் அவரது தந்தை.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கையிலே ஆகாசம்.. முதல் தடவை விமானத்தில் பறந்த இளைஞரின் நெகிழ்ச்சி பதிவு.. வாழ்த்து சொன்ன நடிகை குஷ்பு..!
இந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் டி 20 உலக கோப்பையையும் இந்திய மகளிர் அணி வென்று வரலாற்று சாதனையும் புரிந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இதில் கங்கோடி திரிஷா 24 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆந்திர மாநிலத்தின் பத்ராசலத்தை சேர்ந்தது திரிஷாவின் குடும்பம். கிரிக்கெட் மீது திரிஷா கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக அவரது தந்தை கங்கோடி செகந்திராபாத்திற்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார். தொடர்ந்து, திரிஷாவின் கனவு ஜெயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் தான் நடத்திவந்த உடற்பயிற்சி நிலையத்தை விற்பனை செய்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அதனை தொடர்ந்து, சொந்த ஊரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தையும் விற்று, திரிஷாவின் கோச்சிங்கிற்கு உதவியுள்ளார். சிறிய வயதில் தனது மகளை மைதானத்துக்கு அழைத்துச் செல்லும் அவர் தினசரி 300 பந்துகள் வரை வீசியதாகவும், தனது மகளின் வெற்றிக்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
கையில் இருந்த சொத்தை விற்று தன்னை உயர்த்திய தந்தைக்கு உலகக்கோப்பையை வென்று பரிசளித்திருக்கிறார் திரிஷா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மேட்ச் ப்ரஷர் ஆகும்போது".. தோனி கொடுத்த அட்வைஸ்.. ஆப்கான் வீரர் உருக்கம்.. .. 'Captain Cool'-ன்னு சும்மாவா சொல்றாங்க..?!
- சிங்கிள் போச்சே..! மார்க்கின் ராஜதந்திரத்தை தவிடுபொடியாக்கிய வாஷிங்டன் சுந்தர்.. சும்மா பறந்து போய் பிடிச்ச கேட்ச்.. வீடியோ
- "அவரை பத்தி யாருமே பெருசா பேசலயே".. இந்திய வீரருக்காக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதங்கம்!!
- சூரிய குமார் யாதவிற்கு ICC கொடுத்த அங்கீகாரம்.. மொத்த ரெக்கார்டையும் காலி பண்ணிட்டாரு மனுஷன்...!
- "எலேய், நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு".. இளம் வீரர் அடித்த சிக்ஸ்.. ஒரு நிமிஷம் Stuck ஆகி போன ரோஹித்.. வைரலாகும் ரியாக்ஷன்!!
- "இப்படியா பண்றது?".. இஷான் கிஷன் செயலால் அப்செட் ஆன கோலி?.. மேட்ச் நடுவே பரபரப்பு சம்பவம்.. வீடியோ
- மேட்ச் நடுவே மாரடைப்பால் சரிந்த போலீஸ் அதிகாரி.. பரபரப்பான ஊழியர்கள்.. உயிரை காப்பாத்திய உதவி.. India vs New Zealand
- சதம் அடிச்சிட்டு கொண்டாடிய ரோஹித்.. சூரிய குமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. வைரலாகும் வீடியோ..!
- "நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கவலையில்ல".. தோனிக்கு வார்னிங் கொடுத்த ரவி சாஸ்திரி.. போட்டு உடைத்த முன்னாள் பயிற்சியாளர்..!
- "ரன்னு 16 இருக்கு, பாலு ஒண்ணு தானே இருக்கு".. டி 20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. பின்னி பெடல் எடுத்த ஸ்மித்!!