‘எந்த சந்தேகமும் இல்ல.. தோல்விக்கு இதுதான் காரணம்’.. இந்தியா செய்த ‘தவறை’ சுட்டிக்காட்டிய கம்பீர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கான காரணத்தை கௌதம் கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. முதல் போட்டியே தோல்வியடைந்ததால், அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது.

இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா தனது இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்காக காரணத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், ‘எந்தவொரு போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் திறமை முக்கியம்தான். ஆனால் இந்திய அணியிடம் திறமை இருந்தும் தோல்வி அடைந்ததற்கு காரணம் மன வலிமை இல்லாததுதான். அதற்கு காரணம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மன நிலையுடன் இந்தியா விளையாடியது.

அதனால்தான் எந்த தவறும் செய்யக்கூடாது என நினைத்தே தவறு செய்துள்ளனர். சொல்லப்போனால் அப்போட்டியை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்திய அணிக்கு மன வலிமை இல்லை என்றே சொல்லலாம். இதில் சந்தேகமே இல்லை. பயத்துடன் விளையாடியதே இந்திய அணிக்கு தோல்விக்கு காரணம்’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார். முன்னதாக, நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் தைரியத்துடன் செயல்படவில்லை என கேப்டன் விராட் கோலி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, GAUTAMGAMBHIR, T20WORLDCUP, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்