"ஒட்டு மொத்தத்துல சும்மா 'கில்லி' மாதிரி இருக்காங்க.. அதகளமான 'டீம்'ங்க இது.." 'இந்திய' அணியை பார்த்து மிரண்டு போன முன்னாள் 'வீரர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால், இரு அணிகளும் அதிக பலத்துடன் உள்ள நிலையில், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. மேலும், இந்த போட்டிக்கான இந்திய அணியையும் சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில், சில முக்கிய வீரர்கள் ஏன் இடம்பெறவில்லை என ஒருபக்கம் கேள்விகள் எழுந்தாலும், இதுவும் பலம் வாய்ந்த அணி தான் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் (Parthiv Patel) பேசுகையில், 'இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணி என்றே நான் கருதுகிறேன். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை ஒப்பிட்டு பார்த்தால், இந்திய அணி தான் அதிக பலத்துடன் இருக்கிறது. ஏனென்றால், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி நாம் பேசும் போது, பும்ரா, இஷாந்த் மற்றும் ஷமி உள்ளனர். இதில், யாராவது விலகினால் கூட, உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் உள்ளனர்.

அதே போல, பேட்டிங்கைப் பொறுத்தவரையில், ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ரஹானே, கோலி, புஜாரா, ரிஷப் பண்ட் உள்ளனர். அதே போல, இன்னொரு பேட்ஸ்மேன் கே எல் ராகுலும் உள்ளார். டெஸ்டில் சிறந்த பேட்ஸ்மேனான ராகுல் வெளியே உட்கார வைக்கப்படுவது என்றால், இந்திய அணியின் பேட்டிங் எப்படி வலிமையாக உள்ளது என்பதை நினைத்து பாருங்கள்.

மேலும், ஜடேஜா இடத்தில் ஆட வந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதுகளை அள்ளிய அக்சர் படேலும் இடம் பிடித்துள்ளார். தற்போது ஜடேஜா மற்றும் அஸ்வினும் வந்துள்ளனர். எனவே இந்த அணி மிகவும் வலுவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்' என பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்