தம்பி நானும் மேட்சுக்கு வர்றேன்.. சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சூரிய குமார் யாதவ்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூரிய குமார் யாதவ் சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. நான்காவது போட்டியில் இந்திய அணியில் சூரிய குமார் இடம்பெறுவாரா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் அவர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சூரிய குமார் யாதவ்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வருகிறார் சூரிய குமார் யாதவ். இவர் 31 போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,164 ரன்களை அடித்து 2022 ஆம் ஆண்டின் ICC ஆடவர் T20I கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டும், டி20 போட்டிகளில் 152.57 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் ஆறு போட்டிகளில் 267 ரன்கள் குவித்துள்ளார். ஜனவரியில், சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக சூரிய குமார் யாதவ் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுடன்

இந்நிலையில் சூரிய குமார் யாதவ் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. மும்பையில் தெருவில் சிறுவர்கள் சூழ்ந்து நிற்க, சூரிய குமார் யாதவ் பேட்டிங் செய்கிறார். எப்போதும், வித்தியாசமான ஷாட்கள்  மூலமாக எதிரணி பவுலர்களை திணறடிப்பது சூரிய குமார் யாதவின் வழக்கம்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் சிறுவன் ஒருவர் லெக் சைடில் லோவாக பந்தை போட, தனக்கே உரித்தான வித்தியாசமான ஸ்வீப் ஷாட்டை ஆடுகிறார் சூரிய குமார். அப்போது அங்கிருந்த சிறுவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

SURYA KUMAR YADAV, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்