ICC Rankings : பட்டியலில் ஜூனியர் முதல் சீனியர் வரை… கலக்கும் இந்திய வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் பலர் முன்னணியில் உள்ளனர்.

ICC Rankings : பட்டியலில் ஜூனியர் முதல் சீனியர் வரை… கலக்கும் இந்திய வீரர்கள்!
Advertising
>
Advertising

கிரிக்கெட்டில் காலம் காலமாக இருந்த பழக்கத்தை மாற்றப் போகும் ஐசிசி… ஏன் தெரியுமா?

ஐசிசி கடந்த இந்த மாதத்துக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என மூன்று பிரிவுகளில் வெளியாகியுள்ள பட்டியலில் 6 இந்திய வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கோலி முன்னேற்றம் ரோஹித் பின்னடைவு

பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸியின் இளம் வீரர் மார்னஸ் லபுஷான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறார். அவருக்கு அடுத்த இடங்களில் ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உள்ளனர். 7 ஆவது இடத்தில் இருந்த கோலி 2 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளார். அதுபோல ஐந்தாவது இடத்தில் இருந்த ரோஹித் ஷர்மா ஆறாவது இடத்திக்கு பின் தங்கியுள்ளார்.  பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் முதல் முறையாக 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரின் உச்சபட்ச ரேங்கிங் ஆகும். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி 96 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

அஸ்வின் மற்றும் பூம்ரா

பவுலர்களுக்கான தரவரிசையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த மாதம் போலவே பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்திலிம் பூம்ரா 10 ஆவது இடத்திலும் உள்ளனர். பூம்ரா கடந்த மாதம் 9 ஆவது இடத்தில் இருந்த நிலையில் ஒரு இடம் பின்தங்கியுள்ளார். இவர்கள் இருவரைத் தவிர வேறு இந்திய பவுலர்கள் பட்டியலில் இல்லை.

நம்பர் 1 ஆன ஜட்டு

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுத்த ஜடேஜா ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்து முதலிடத்துக்கு சென்றுள்ளார். அவர் முதல் இடத்தில் இதற்கு முன்பே சில காலம் இருந்திருக்கிறார். இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் இரண்டாம் இடத்தில் இருந்து ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.  ரவிந்தர ஜடேஜா 406 புள்ளிகளும், அஸ்வின் 347 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.  இந்த பட்டியலில் வேறு எந்த இந்திய வீரரும் இல்லை. 

ஜூனியர் முதல் சீனியர் வரை

ஐசிசி டெஸ்ட் வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பெற்று வருகின்றனர். கோலி முதல் இரண்டு இடங்களை நீண்ட நாட்கள் இருந்தார். இப்போது புதிதாக ரோஹித் ஷர்மா, பூம்ரா மற்றும் இளம் வீரரான பண்ட் ஆகியோர் பட்டியலில் நுழைய ஆரம்பித்துள்ளனர். இது இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ICC Rankings: ஒரே மேட்சில் உச்சத்துக்கு சென்ற ஜட்டு… ஐசிசியின் புதிய தரவரிசை

CRICKET, INDIAN PLAYERS, TOP POSITION, ICC, ICC RANKINGS, ஐசிசி, இந்திய வீரர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்