‘நீண்டநாள் தோழியுடன் திருமண பந்தத்தில்’... ‘அடியெடுத்து வைத்த தமிழக வீரர்’... ‘வைரலாகும் ஃபோட்டோக்கள்’... ‘குவியும் பாராட்டுக்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழகச்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, தனது நீண்டகால தோழியை மணந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்த வருண் சக்கரவர்த்தி, தமிழக அணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில்  பங்குபெற்று சுழற்பந்து வீச்சாளராக அசத்தி வந்தார். பின்னர் தமிழக அணி சார்பாக ரஞ்சி போட்டியிலும் கலந்து கொண்டு சாதித்து வந்தார்.

இதன்காரணமாக கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஐபிஎல் அணியில் 8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி. ஆனால் இவரது முதல் ஓவரிலேயே 25 ரன்கள் எடுக்கப்பட்டதால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் விடுவிக்கப்பட்ட இவரை கொல்கத்தா அணி வாங்கியது.

இதையடுத்து அபுதாபியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் டி20  போட்டியில் இடம் பிடித்தார்.

ஆனால் காயம் காரணமாக இவர் விலக, இவருக்கு பதிலாக தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்திய அணியில் இருந்து விலகி, தமிழகம் திரும்பிய அவர், நடிகர் விஜயின் தீவிர ரசிகராவர். இதனால் அவரை நேரில் சந்தித்து வருண் சக்கரவர்த்தி ஃபோட்டோ ஒன்றும் வெளியிட்டு வைரல் ஆனது. இந்நிலையில் வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

தனது நீண்டகால தோழியை, எளியமுறையில் சென்னையில் வருண் சக்கரவர்த்தி திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர் கிரிக்கெட் சம்பந்தமான ஜீவா படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்