என்னது கோலி சாதனையவே காலி செய்யப்போகிறாரா? டி20 போட்டிகளில் புது ரெக்கார்ட் படைக்கப் போகும் இந்திய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூசிலாந்து போட்டியிடும் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டி ஜெய்பூரிலும் இரண்டாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்ற பின்னர், இந்தியா- நியூசிலாந்து டி20 தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. முதல் இரண்டு போட்டியில் வென்றதால் இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கெனவே வென்றுவிட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்ட காயத்தை இந்த டி20 தொடரின் வெற்றி சற்று ஆறுதலாய் அமைந்திருக்கிறது. குறிப்பாக புதிய கேப்டன் ஆக ரோகித் சர்மா பதவியேற்ற முதல் தொடரிலேயே வெற்றி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் தனி முத்திரை பதித்துள்ளார் ரோகித் சர்மா.

இந்தியா- நியூசிலாந்து தொடரின் நடந்து முடிந்த இரு போட்டிகளில் முறையே 48 மற்றும் 55 ரன்கள் குவித்துள்ளார் ரோகித் சர்மா. இந்த இரு போட்டிகளில் ரோகித் கணிசமான ரன்கள் குவிக்க தற்போது டி20 முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பதற்காகத் தயாராகி உள்ளார் ரோகித். சமீபத்திய இரு போட்டிகளிலும் சேர்த்து ரோகித் அடித்த 103 ரன்கள் உடன் தனது டி20 கிரிக்கெட் பயணத்தில் 3,141 ரன்களைக் குவித்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரோகித்.

ரோகித் இதுவரையில் தனது டி20 கிரிக்கெட் பயணத்தில் 118 போட்டிகளில் விளையாடி 3,141 ரன்களை அடித்துள்ளார். முன்னாள் டி20 கேப்டன் ஆன விராட் கோலி இதுவரையில் டி20 போட்டிகளில் விளையாடி 3,227 ரன்களை அடித்துள்ளார். ஆக, இன்னும் 87 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துவிடுவார்.

இந்தியா- நியூசிலாந்து மோதிய 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் இதுவரையிலான தனது டி20 கிரிக்கெட் பயணத்தில் 3,248 அடித்து தற்போது கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். கப்டில் இதுவரையில் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 தொடரில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளதால் ரோகித் சர்மா இன்னமும் அதிக ரன்களைக் குவித்து கோலியின் சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CRICKET, VIRAT KOHLI, ROHIT SHARMA, T20I

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்