'டூ' என கத்தி நியூசிலாந்து பேட்ஸ்மேனை குழப்பிய 'இந்திய' வீரர் .... எச்சரித்த 'நடுவர்' ... 'ஒயிட் வாஷ்' செய்த 'நியூசிலாந்து' !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது நியூசிலாந்து வீரர் ரன் ஓடி கொண்டிருக்கையில் இந்திய அணியின் பீல்டர் ஒருவர் அடுத்த ரன்னிற்கு அழைத்து பேட்ஸ்மேனை குழப்பியதால் நடுவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை எச்சரித்தார்.
132 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லதாம் மற்றும் டாம் ப்ளண்டல் களமிறங்கினர். நான்காவது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட லதாம் பந்தை லெக் சைடு அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார். அப்போது இந்திய வீரர்களில் ஒருவர் 'டூ' என இரண்டாவது ரன்னிற்காக கத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்று குழப்பமடைந்தனர். இரண்டாவது ரன்னிற்கு போலியாக அழைத்ததற்கு ஆட்ட நடுவர் ரிச்சர்ட் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட இந்திய அணியை எச்சரித்தார்.
கிட்ட தட்ட தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியில் வீரர் ஒருவர் இது போன்ற விதிக்கு புறம்பான செயலில் ஈடுபட்டது கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளளது. இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- மூன்றே நாட்களில் முடிந்த 'டெஸ்ட்' ... 'எட்டு' வருடங்களுக்குப் பிறகு ... 'நம்பர் 1' அணியின் மோசமான 'நிலை' !
- 'இத விட பெஸ்ட் 'கேட்ச்' காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட்'... காற்றில் மிதந்த 'ஜடேஜா'வுக்கு ஆன்லைனில் பறக்கும் 'மீம்ஸ்'கள் .. வைரலாகும் 'வீடியோ'
- ‘சச்சினுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில்’... ‘சாதனைப் புரிந்த இளம் வீரர்’... ‘2 மாற்றங்களுடன் களமிறங்கினாலும்’... ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி’!
- 'ஐ.பி.எல் போட்டிகள் வேணாம்'.. அதே 'எனர்ஜி'ய இங்க காட்டுங்க.... இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறும் 'கபில் தேவ்'
- ‘இப்டி டீமை மாத்திட்டே இருந்தா’... ‘அப்புறம் எப்படி இருக்கும்’... ‘ஏன் அந்த வீரரை எடுக்கல’... ‘வறுத்தெடுத்த முன்னாள் கேப்டன்’!
- ‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா?’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’!
- ‘இரண்டே ரன்னில் அவுட்’... 'திரும்பவும் மோசமான காலக் கட்டம்'... 'ரன் மெஷினுக்கு என்னாச்சு'... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'!
- 'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'!
- ‘டி20 உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வா?’... 'விராட் கோலி அதிரடி பதில்'!