"இந்த தடவ 'gift' ஒண்ணும் இல்லையா??..." 'இந்திய' ரசிகர்களை கடுப்பாக்கிய வாகனின் 'ட்வீட்'... பதிலுக்கு நம்ம ஆளுங்க போட்ட 'கமெண்ட்'ஸ் தான் 'ஹைலேட்டே'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஐந்து நாட்களிலும் இங்கிலாந்து அணியின் கையே அதிகம் ஓங்கியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி தோல்வியை பதிவு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக தோல்வியையும் தற்போது சந்தித்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட இந்தியன் ஜெர்சியை லயனுக்கு பரிசளித்தனர். ஆனால், அப்படி எதையும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு வழங்கவில்லை.

இந்நிலையில், இதனை கேள்வி எழுப்பி, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ட்வீட் செய்துள்ளார். 'கப்பாவில் நூறாவது டெஸ்ட் போட்டியை ஆடிய லயனுக்கு, நீங்கள் வென்ற பிறகு இந்திய ஜெர்சியை அவருக்கு பரிசளித்தீர்கள். அதே போல, ஜோ ரூட்டுக்கும் தோல்விக்கு பின் ஜெர்சியை இந்திய அணி பரிசளித்ததா? அப்படி ஏதேனும் நிகழ்வு நடந்ததா?' என இந்திய அணியின் தோல்வியை நக்கலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

 

இந்த கருத்து இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், பலர் வாகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'நீங்களே சென்று அடுத்தவர்களிடம் பரிசை கேட்கக் கூடாது' என்றும், 'இந்திய அணி தொடரை வென்று கடைசி டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் பரிசளிக்கும்' என பல விதமான கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.











 

அடிக்கடி இந்திய அணி குறித்து நக்கலாக டீவீட்டை பதிவு செய்து, சர்ச்சையை ஏற்படுத்துவதை மைக்கேல் வாகன் வாடிக்கையாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்