என்னது இந்தியா டீமுக்குள்ள ‘ரெண்டு’ கேங்கா பிரிஞ்சு இருக்காங்களா..? கொழுத்திப் போட்ட பாகிஸ்தான் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ரசிகர்கள் இரு பிரிவுகளாக வீரர்கள் உள்ளதாக பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று (21.01.2022) போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா இந்திய அணி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘தென் ஆப்பிரிக்கா தொடரின்போது இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் இரு பிரிவுகளாக இருப்பதை பார்க்க முடிந்தது. கே.எல்.ராகுல் தலைமையில் சிலரும் விராட் கோலி தலைமையில் சிலரும் உள்ளதாக தெரிகிறது. விராட் கோலி கேப்டனாக இருந்த விளையாடிய மனநிலையில் தற்போது இல்லை. ஆனால் அவர் ஒரு அணிக்கான வீரர். வலிமையாக திரும்பி வரவேண்டும்’ என டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

நைட்டி அணிந்து வீட்டுக்குள் நுழைந்த நபர்.. உடனே பக்கத்துவீட்டுக்காரரை ‘அலெர்ட்’ பண்ணிய பெண்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து திடீரென ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டார். இதனை அடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருடன் இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

இதனை அடுத்து டி20 மட்டும் ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் துணை கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டியை கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி எதிர்கொண்டது. ஆனால் அப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. அதனால் அவர் மீது அப்போது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. வெளியான போட்டி அட்டவணை! எந்த தேதி - கிரவுண்ட் தெரியுமா?

 

முன்பு விராட் கோலியின் தலைமையின் கீழ் கே.எல்.ராகுல் விளையாடினார். தற்போது அவரின் தலைமையின் கீழ் விராட் கோலி விளையாடி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய அணிக்கு இரு பிரிவுகளாக வீரர்கள் பிரிந்து இருப்பதாக பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

DANISH KANERIA, FORMER PAKISTAN SPINNER DANISH KANERIA, இந்திய அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்