மூனு மேட்ச்லயும் டக்.. இருந்தாலும் சூர்ய குமார் யாதவ் செய்த 'கோல்டன் டக்' Records.. விவரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

Advertising
>
Advertising

Image Source - BCCI.TV

இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க  பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில்  நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டி டிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது இந்திய அணி. இதன் பலனாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் வைத்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் கோப்பை யாருக்கு? என தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியை வென்று தொடரை வென்றது. இந்த தொடரின் மூன்று போட்டியிலும் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ், டக் அவுட்டாக்கி பெவிலியன் திரும்பி இருந்தார். இதனை கிரிக்கெட் வட்டாரங்களில் கோல்டன் டக் [0 (1)] என அழைப்பார்கள். 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2378 முறை கோல்டன் டக் அவுட் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் ஒரு தொடரில் மூன்று முறை கோல்டன் டக் ஆன முதல் வீரர் என்ற Record-யை சூர்ய குமார் யாதவ் வைத்துள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் மூன்று முறை கோல்டன் டக் ஆன வீரர் என்ற Record-யையும் சூர்ய குமார் யாதவ் வைத்துள்ளார். அதேபோல் ஹாட்ரிக் முறையில் டக் அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் சூர்ய குமார் யாதவ், ஆறாவது இடத்தில் உள்ளார்.

முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 1994, அணில் கும்ப்ளே 1996, ஜாகீர் கான் 2003-04, இஷாந்த் ஷர்மா 2010-11, பும்ரா 2017-19 ஆகியோர் ஹாட்ரிக் முறையில் டக் அவுட்டாகி உள்ளனர்.

CRICKET, SKY, SURIYA KUMAR YADAV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்