‘மீண்டு வா சின்ன தல’.. என்ன ஆச்சு சுரேஷ் ரெய்னாவுக்கு?.. சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே ஸ்டார் ப்ளேயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு கடந்த சில வருடங்களாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனால் ரெய்னா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாகவும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா, அதற்காக நெதர்லாந்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் 4 முதல் 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான வாட்சன், அறுவசை சிகிச்சை செய்துள்ள சுரேஷ் ரெய்னா விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

CSK, SURESHRAINA, BCCI, TEAMINDIA, WATSON, INJURY, KNEE SURGERY, YELLOVE, WHISTLEPODU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்