எடுத்தது ஒண்ணு கொடுத்தது வேறொண்ணு… கைவசம் பல வித்தைகள வச்சிருப்பாரோ!- முகமது சிராஜை மிரட்டிய சக வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் தன்னுடைய மேஜிக் திறமையால் அவ்வப்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருபவர் ஷ்ரேயாஸ் ஐயர். அணியினர் மத்தியில் தனது மேஜிக் திறமையாக முகமது சிராஜை அதிர வைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

Advertising
>
Advertising

பிசிசிஐ வெளியிட்டுள்ள ஷ்ரேய் ஐயரின் மேஜிக் வீடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சீட்டுக்கட்டுகள் கொண்டு ஷ்ரேயாஸ் செய்யும் மேஜிக்கை பார்த்து சிராஜ் மிரண்டு நகர்வது போல் அந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றி ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் ஆகியோர் ஷ்ரேயாஸ் செய்யும் மேஜிக்கை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 உலகக்கோப்பையை விளையாடிய இந்திய அணி அரையிறுத்திக்குக் கூட தகுதி பெற முடியாமல் தொடரை விட்டு வெளியேறியது. அதன் பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை சொந்த மண்ணில் விளையாடிய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. பல இளம் வீரர்கள் உடன் முதல் முறையாக முழு நேர டி20 கேப்டன் ஆக ரோகித் சர்மா தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

வெள்ளைப்பந்து போட்டியான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி, சிவப்புப் பந்து போட்டியான டெஸ்ட் தொடரில் கேப்டன் ஆக இணைவார். நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 25-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் கோலி கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக ரஹானே கேப்டன் ஆக இருந்து செயல்படுவார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் கோலி, இந்திய அணியில் இணைந்து கொள்வார். முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் சட்டேஸ்வர் புஜாரா இந்திய அணியின் துணை கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நியூசிலாந்து அணியிலும் டி20 தொடரில் ஓய்வில் இருந்த நட்சத்திர வீரர்களான கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் டெஸ்ட் தொடரில் தங்களது அணியில் இணைந்து கொள்கின்றனர்.

CRICKET, MOHAMMED SIRAJ, SHREYAS IYER, RUTURAJ GAIKWAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்