"ஸாரிப்பா.. என்னால உங்கள காப்பாத்த முடியாம போயிருச்சு..." 'தந்தை'யின் திடீர் மறைவால் உடைந்து போன இந்திய 'கிரிக்கெட்' வீரர்!... ஆறுதல் கூறும் 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த லெக் ஸ்பின்னராக இருந்த ராகுல் ஷர்மா, கடந்த 2012 ஆம் ஆண்டின் போது போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டிருந்தார்.

அதே போல, சர்வதேச கிரிக்கெட்டில் சில போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள ராகுல் ஷர்மாவால், அதன் பிறகு சர்வதேச அணியில் ஆட முடியாமல் போனது. ஐபிஎல் போட்டிகளிலும் கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஆடிய ராகுல் ஷர்மா, 2015 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த போதும் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. மேலும், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆடவும் அவர் தேர்வாகியிருந்தார். ஆனால், அவரை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை.

மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கும் ராகுல் ஷர்மாவிற்கு மீண்டும் ஒரு துக்கம் வந்து அவரை இன்னும் நெருக்கடிக்குள் ஆக்கியுள்ளது. கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை அதே கொடிய தொற்றின் மூலம் உயிரிழந்துள்ளார்.

தந்தையின் பிரிவால் உடைந்து போன ராகுல் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அவர், 'நீங்கள் சீக்கிரமாக எங்களை விட்டு சென்று விட்டீர்கள். உங்களை கொரோனா தொற்றில் இருந்து என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கை, முன்பு போல எனக்கு இருக்காது' என்று கூறி வருந்தியுள்ளார்.



 

மேலும், 'நீங்கள் இல்லாத வாழ்க்கை, முன்பு போல இருக்காது' என்றும், 'மன உறுதி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை உங்களிடம் இருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்' என்றும் கூறியுள்ளார்.
 


மேலும், இன்னொரு ட்வீட்டில், இந்திய அணிக்காக தான் மீண்டும் ஆட வேண்டும் என்று தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார். சிறந்த வீரரான ராகுல் ஷர்மா, ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் நிலையில், தந்தையின் உயிரிழப்பால் மேலும் கலங்கிப் போயுள்ளார்.

இதனால், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலர், அவருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்