“என் தலைவன் ‘Undertaker’ மட்டும் இந்த வீடியோவ பார்த்தா..!”- இந்திய கிரிக்கெட் டீம்ல ‘இப்டி’ ஒரு வெறி ரசிகனா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

‘அண்டர்டேக்கர்’-ன்னா மொரட்டு அடி, அண்டர்டேக்கர்-ன்னா சாவு அடி என 90-ஸ் கிட்ஸ்களான நம்மில் பலரும் இந்நாள் வரையிலும் அண்டஎடேக்கர் ரசிகர்களாக சுற்றிக் கொண்டிருப்போம். அதே போன்ற ஒரு வெறித்தனமான அண்டர்டேக்கர் ரசிகர் நம்ம இந்திய கிரிக்கெட் அணியிலும் இருக்கிறார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட இந்த இந்திய கிரிக்கெட் வீரர் தற்போது ‘ரெஸ்லிங்’ உலகின் ஜாம்பவானுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளார் வெங்கடேஷ் ஐயர். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட வெங்கடேஷ் ஐயர் இந்தூரில் வளர்ந்தவர். முதன்முறையாக தற்போது தொடங்கி இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளார். டி20 தொடரின் முதல் போட்டியிலேயே வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முடிந்த ஐபிஎல் போட்டித் தொடரின் இரண்டாம் பாதியில் கண்டெடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

தற்போது புதிய இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கையால் இந்திய அணியின் ப்ளூ தொப்பியை வாங்கிக்கொண்டு பெருமை உடன் இந்திய அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில் முதல் முறையாக அறிமுகம் ஆகியுள்ள வீரர் என்பதால் பிசிசிஐ ஒரு சின்ன அறிமுக வீடியோவை ரசிகர்களுக்காக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், வெங்கடேஷ் ஐயர் தனது நண்பர் அவேஷ் கான் குறித்தும், அணி கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் வரவேற்பும் ஊக்கமும் குறித்துப் பேசினார்.

இதுபோக, 90-ஸ் கிட்ஸ்களுள் ஒருவரான வெங்கடேஷ் ஐயர் தான் ஒரு மிகப்பெரிய ‘அண்டர்டேக்கர்’ ரசிகன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். சின்ன வயதில் இருந்தே WWE மற்றும் WWE Undertaker ரசிகன் என்பதை பெருமையாகத் தெரிவித்துள்ளார் வெங்கடேஷ். மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய சிறு வயதில் அண்டர்டேக்கர் தான் என்னுடைய ஹீரோ. WWE நிகழ்ச்சியின் பெரிய ரசிகன். அதைவிட WWE அண்டர்டேக்கரின் மிகப்பெரிய ரசிகன். இந்த வீடியோவை அண்டர்டேக்கர் கண்டிப்பாக  பார்த்து அவரது பெல்ட்-ல் ஆட்டோக்ராப் போட்டு எனக்கு அனுப்பணும்ன்னு ஆசை” எனப் பேசி உள்ளார்.

 

ரெஸ்லிங் உலகின் நாயகன் அண்டர்டேக்கர் தனது விளையாட்டில் இருந்து கடந்த ஜூன் 2020-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு சர்வைவர் சீரிஸில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவரை எந்தவொரு நிகழ்ச்சியிலும் ரசிகர்கள் பார்க்க முடியவில்லை.

 

CRICKET, WWE, WWE UNDERTAKER, VENKATESH IYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்