இந்திய கிரிக்கெட் அணியோட அடுத்த பவுலிங் பயிற்சியாளர் இவர் தான் போல! செம சிபாரிசாம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இவர் இருக்க வேண்டும் என்று மூத்த வீரர் ஒருவர் விரும்புவதாக தகவல் பரவியுள்ளன.

Advertising
>
Advertising

53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக இருந்த நகராட்சியை கைப்பற்றிய திமுக.. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஒருவர், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்கர் குறைந்தபட்சம் 2023 சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையைச் சார்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர் இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒரு நாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தனது கிரிக்கெட் வாழ்வில் 58 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 288 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகளையும், 3 டி20 சர்வதேச விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021க்குப் பிறகு இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் இருந்து பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் வெளியேறிய பிறகு, இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பராஸ் மாம்ப்ரே நியமிக்கப்பட்டார்.

மாம்ப்ரே தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) லெவல்-3 பயிற்சி டிப்ளோமாவைப் பெற்றவர், மேலும் நவம்பர் 2021 இல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் வங்காளம், மகாராஷ்டிரா, பரோடா மற்றும் விதர்பா ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார்.

மேலும், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நான்கு வருடங்கள் உதவிப் பயிற்சியாளராக இருந்தவர், மேலும் அவர் இந்தியா ஏ அணி மற்றும் U19 இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தவர்.

தற்போது டிவி வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்யும் பட்சத்தில் ராகுல் டிராவிட்டிற்கு கீழ் அஜித் அகார்கர் செயல்படுவார்.

ஐபிஎல் ஏலத்தை நிறுத்துங்க.. பேரம் பேச வீரர்கள் என்ன கால்நடைகளா?" – சி.எஸ்.கே வீரர் கோரிக்கை

INDIAN CRICKET TEAM, NEW BOWLING COACH, AJIT AGARKAR, இந்திய கிரிக்கெட் அணி, பவுலிங் பயிற்சியாளர், அஜித் அகார்கர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்