மனசே குளிர்ந்து போச்சுப்பா.. 100-வது டெஸ்ட்டில் புஜாரா.. இந்திய அணி கொடுத்த கவுரவம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரரான புஜாராவிற்கு சக வீரர்கள் அளித்த கவுரவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஒரே அசதி... திருடப்போன இடத்துல தூக்கம் போட்ட ஆசாமி.. எழுப்பி கூட்டிட்டுப்போன போலீஸ்.. யாரு சாமி இவரு..!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா. இதுவரையில் 99 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள புஜாரா 7021 ரன்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்களும் 3 இரட்டை சதங்களும் 34 அரை சதங்களும் அடக்கம். எந்த அணியாக இருந்தாலும், எத்தனை கடுமையான ஆடுகளம் என்றாலும் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் புஜாரா. இந்நிலையில் டெல்லியில் இன்று துவங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் புஜாரா விளையாடி வருகிறார். இது அவருடைய 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முன்னேறுவதற்கு இந்திய அணி இந்த தொடரைக் கைப்பற்ற வேண்டிய சூழலில் உள்ளது. அப்படி இருக்கையில் தொடரையும் வெற்றியுடன் இந்திய அணி தொடங்கி உள்ளதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அதே வேளையில், முதல் போட்டி தோல்விக்கு நிச்சயம் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி மைதானத்தை கணித்து ஆடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்குமே இரண்டாவது டெஸ்ட் போட்டி முக்கியமான ஒன்று என்பதால் இந்த போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் இன்றைய போட்டி துவங்கிய நேரத்தில் பீல்டிங் செய்ய மைதானத்திற்கு உள்ளே வந்த இந்திய அணி வீரர்கள் இருபுறமும் நின்று கைதட்டி புஜாராவை வரவேற்றனர். அதன் பிறகு, ஒவ்வொரு வீரரும் புஜாராவை கட்டியணைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல, தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா சதமடிப்பாரா? எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read | "வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தான் போகணும்".. குடும்பத்துடன் சேர்த்து வச்ச போலீசுக்கு பெண் வச்ச கோரிக்கை.. நெகிழ்ச்சி வீடியோ..!

CRICKET, INDIAN CRICKET TEAM, PUJARA, 100TH TEST MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்