டிராவிட் போட்ட ‘விதை’.. இப்போ எப்படி நடக்குது பாத்தீங்களா.. கொண்டாடும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் செய்த செயலை பிசிசிஐ பின்பற்றியது வரவேற்பை பெற்று வருகிறது.

டிராவிட் போட்ட ‘விதை’.. இப்போ எப்படி நடக்குது பாத்தீங்களா.. கொண்டாடும் ரசிகர்கள்..!
Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் கான்பூர் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Indian cricket team donate Rs 35,000 to Wankhede Stadium groundsmen

இதனை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்த நிலையில் வான்கடே மைதானம் ஊழியர்களுக்கு பிசிசிஐ 35,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி உள்ளது. முன்னதாக கான்பூர் மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 35,000 ரூபாய் கொடுத்தார்.

போட்டி கடைசி வரை சுவாரசியமாக இருக்கும் வகையில் மைதானத்தை தயார் செய்ததாக மைதான ஊழியர்களை பாராட்டி, ராகுல் டிராவிட் இந்த ஊக்கத் தொகையை வழங்கினார். இதனை தற்போது பிசிசிஐ தொடர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

BCCI, RAHULDRAVID, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்