ஸ்பெஷல் ரசிகருக்கு இந்திய அணியினர் கொடுத்த சர்ப்ரைஸ்.. "மனச தொட்டுட்டாங்கப்பா".. எமோஷனல் ஆகும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பையை முடித்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

Advertising
>
Advertising

அங்கே டி 20 தொடர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட இந்திய அணி சென்றிருந்தது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்ததால் டி 20 தொடரில் ஹர்திக்
ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவானும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது போட்டியிடையே மழை குறுக்கிட இதன் பின்னர் DLS முறைப்படி அந்த போட்டி டை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், இன்று ஆரம்பமாகிறது. இதற்கு முன்பாக சில வீரர்கள் ஓய்வில் இருக்கும் போது இந்திய அணியை தலைமை தாங்கிய அனுபவம் ஷிகர் தவானுக்கு உள்ளது. சீனியர் வீரர் என்பதால் நிச்சயம் ஒரு நாள் தொடரில் அவர் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

டி 20 தொடரை வென்றது போல, ஒரு நாள் தொடரையும் வெல்ல வேண்டும் என்றும் இந்திய வீரர்கள் முனைப்புடன் தயாராகி வருகின்றனர். இந்திய அணியினர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் சமயத்தில், ஸ்பெஷல் ரசிகர் ஒருவருக்காக கிரிக்கெட் வீரர்கள் செய்த விஷயம், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

இந்திய அணியினர் பயிற்சி செய்து கொண்டிருந்த போது மைதானத்தில், திவ்யான்ஸ் என்ற மாற்றுத் திறனாளி ஒருவர் நேரடியாக மைதானத்திற்கு வந்து இந்திய வீரர்களுக்கு ஆதரவு அளித்ததாக தெரிகிறது. வீல் சேரில் ரசிகர் ஒருவர் இருப்பதை கண்டதும் இந்திய வீரர்களான உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர், ஷ்ரேயாஸ் ஐயர், ஷார்துல் தாகூர், ரிஷப் பந்த் உள்ளிட்டோர் அவருடன் நின்று கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை பிசிசிஐ தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மாற்றுத் திறனாளி ரசிகருக்காக நேரம் ஒதுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களை பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

IND VS NZ, INDIAN CRICKET, BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்