‘இந்திய பேட்ஸ்மேன்கள் அணிக்காக ஆட மாட்டாங்க’... ‘இதற்காகத்தான் விளையாடுறாங்க’... 'சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கேப்டன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய பேட்ஸ்மேன்கள் எப்போதும் அணிக்காக விளையாடவில்லை. தங்கள் சாதனைகளுக்காகவே விளையாடுவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் அணியின் தலைமை தேர்வாளருமான இன்சமாம்- உல்-ஹக் கூறியுள்ள சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகம் முழுவதும் ஊரடங்கை சந்தித்து வரும் வேளையில் விளையாட்டு உலகமே முடங்கிக்கிடக்கிறது. வீரர்கள் விளையாட முடியாததால் தங்கள் வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், நாள்தோறும் கிரிக்கெட் உலகம் தொடர்பான பல்வேறு விஷயங்களை வீரர்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஷமாம் உல் ஹக் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ரமீஷ் ராஜாவின் யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது 1992 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்ற தருணம் தொடர்பாக தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில், எங்கள் காலத்தில், இந்தியா எங்களை விட பேப்பரில் மிகவும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. பேட்ஸ்மேனாக எங்களது சாதனைகள் அவர்களை விட சிறப்பாக இல்லை. ஆனால் எங்களில் ஒருவர் 30-40 ரன்கள்  எடுத்தால், நாங்கள் அதை அணிக்காக எடுத்தோம்.

அதே இந்திய வீரர்கள் சதம் அடித்து விளாசி அசத்துவார்கள். அது அவர்களின் சுயநலத்திற்காகவே இருக்கும். இது தான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம். இந்திய வீரர்கள் அணியில் தங்களுடைய இடத்தை பாதுகாப்பதற்காகவே விளையாடினார்கள். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய பேட்ஸ்மென்களே ஆதிக்கம் செலுத்துவர். 

அதே நேரத்தில் இம்ரான் கான் டெக்னிக்கல்லாக ஒரு நல்ல கேப்டனாக இல்லாவிட்டாலும், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் எப்படி முழு ஆட்டத்திறனையும் களத்தில் பெற முடியும் என்ற யுக்தியை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்’ என்று  இன்ஷமாம் கூறியுள்ளார். இது கிரிக்கெட் வட்டராத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்