மகனின் சிகிச்சைக்கு உதவி கேட்ட பெற்றோர்.. கே.எல்.ராகுல் செய்த நெகிழ்ச்சி காரியம்.. என்ன மனுஷன்யா..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் T20, ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் என அனைத்து பார்மெட்டுக்கும் ஏற்ற வீரராக வலம் வருகிறார். பேட்டிங்கில் ஜொலிக்கும் இவர் தற்போது தனது உள்ளத்தாலும் ஜொலித்துள்ளார். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மிகப்பெரிய தொகையை வழங்கி அந்தச் சிறுவனுக்கு புது வாழ்வை அளித்தருக்கிறார் ராகுல். இதன் காரணமாக சமூக வலை தளங்களில் ராகுலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

என் வாழ்க்கை சந்தோஷமா இல்லம்மா.. திருமணம் நடந்து ஒரு மாசம் கூட முடியல.. மகள் எடுத்த முடிவினால் உடைந்து நொறுங்கிய பெற்றோர்

அரியவகை நோய்

மும்பையை சேர்ந்த வரத் நலவாடே என்ற சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அடிக்கடி அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மருத்துவரிடம் சென்ற பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வரத் நலவாடேவிற்கு அப்லாஸ்டிக் அனீமியா நோய் இருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகும். இதனால் சிறுவனுக்கு சிறிய காய்ச்சல் வந்தால் கூட மாதக் கணக்கில் இருக்கும்.

அறுவை சிகிச்சை

வரத்தின் நிலைமையை கணக்கில்கொண்டு உடனடியாக பிஎம்டி எனப்படும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு அதிகமாக செலவு ஆகும் என்பதால் பொது மக்களிடம் உதவி கோரினர் வரத்தின் பெற்றோர். சிறுவனின் சிகிச்சைக்காக  ஆன்லைன் மூலமாக நன்கொடை அளிக்கும்படி பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை அறிந்த கேஎல் ராகுல் உடனடியாக 31 லட்சத்தை சிறுவனுக்கு வழங்கி இருக்கிறார். இதனால் வரத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பேசிய ராகுல்,"“வரத்தின் உடல்நிலை குறித்து நான் அறிந்ததும், எனது குழு கிவ் இந்தியாவுடன் தொடர்பு கொண்டது, அதனால் எங்களால் அவனுக்கு உதவமுடிந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், அவர் நன்றாக இருக்கிறார். வரத் விரைவில் நலமுடன் திரும்பி அவரது கனவுகளை அடைவார் என்று நம்புகிறேன். எனது பங்களிப்பு மேலும் மக்கள் முன்வரவும் அவர்களுக்கு உதவவும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்,"  என்றார்.

ராகுலின் இந்த உதவிக்கு வரத்தின் பெற்றோர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் இதுபற்றி பேசுகையில்,"எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாட விரும்புவதாக வரத் அடிக்கடி சொல்லுவான். “வரத்தின் அறுவை சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிய கே.எல்.ராகுலுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அவர் இல்லையேல் எங்களால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை இவ்வளவு குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்திருக்க முடியாது" என்றனர்.

சிறுவனின் சிகிச்சைக்காக கே.எல்.ராகுல் 31 லட்சம்  உதவியது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

"டெல்லியில் இருந்து வந்த சின்னப் பையனுக்கு"..கோலிக்கு யுவராஜ் சிங் எழுதிய உருக்கமான லெட்டர்..!

INDIAN BATSMAN, KL RAHUL, MUMBAI KID WITH HIS SURGERY, COMPLICATED SURGERY, கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட் அணி, அரியவகை நோய், அறுவை சிகிச்சை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்