‘அவரு ரொம்ப நல்லவரு..’ ‘இது எல்லாத்தையும் மீறி இந்தியா வரும்..’ உருகிய பிரபல நட்சத்திர வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ள இந்திய அணி வியாழக்கிழமை நியூசிலாந்துடனும், அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடனும் மோத உள்ளது.
சென்னையில் கிரிக்கெட் அகாடமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஷிகர் தவான் மிகவும் நல்லவர். அதனால்தான் அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது. அவர் ஒரு நல்ல வீரர். அவருடைய உத்வேகமான ஆட்டத்தை இந்தியா நிச்சயமாக மிஸ் செய்யும்” எனக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆட்டம் பற்றிப் பேசிய அவர், “நிறைய நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ராகுல் நன்றாக ஃபிட்-இன் செய்வார் என நினைக்கிறேன். நம்ம ஊரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய்சங்கர் ஆகியோரும் உள்ளனர். யார் யார் விளையாடுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா எல்லாவற்றையும் மீறி வரும். இந்திய அணி நிச்சயமாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும்” என உருக்கமாகக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் எலும்பு முறிவு காரணமாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியா, நியூசிலாந்து போட்டிகள் ரத்தாகுமா?... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'!
- 'ரொம்ப சாரி 'கோலி' ...'மொத்த நம்பிக்கை'யும் போய்டும்... 'இத மட்டும் எங்களால பண்ண முடியாது'!
- ‘திடீர்னு இப்டி நடக்கும்னு யாரும் எதிர்பாக்கலயே’.. சோகமாக நாடும் திரும்பும் மற்றொரு நட்சத்திர வீரர்!
- 'கப்பு வேணும்னு சொன்னிங்க'...'எந்த கப்புனு சொன்னிங்களா?'...'16ம் தேதி' தெரியும்... நெட்டிசன்கள் தெறி!
- 'ஆத்தாடி! இதில விராட் கோலி மட்டும்தானா?'... 'சாதனை புரிந்த ஒரே இந்திய விளையாட்டு வீரர்'!
- தவானுக்கு பதில் அணிக்கு வரும் புதிய வீரர்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
- 'அபிநந்தனை வைத்து இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான்?'... 'டி.வி. விளம்பரத்தால் புதிய சர்ச்சை'!
- 'ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க இவர் யார்?'... 'விராட் கோலியை விளாசிய முன்னாள் வீரர்'!
- காயத்தால் திடீரென விலகிய தவான்..! தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் மற்றொரு வீரர்?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- 'எங்களுக்கு தாய்நாடு இந்தியாவா இல்லாம இருக்கலாம்.. ஆனாலும் நாங்க கோலி ஃபேன்ஸாக்கும்'!