"'பிளான்' எல்லாம் போட்டு 'ரெடி'யா இருக்கோம்.. முடிஞ்சா எங்கள தொட சொல்லுங்க.." 'புஜாரா' அதிரடி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வரும் கிரிக்கெட் போட்டி என்றால், அது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தான்.

ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சம பலத்துடன் விளங்குவதால் எந்த அணி இந்த தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு, இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

இந்திய அணி கடைசியாக, நியூசிலாந்து அணியை அதன் மண்ணில் வைத்து, எதிர்கொண்ட டெஸ்ட் தொடரை, 2 - 0 என்ற கணக்கில் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து, இந்திய டெஸ்ட் அணியின் பேட்ஸ்மேனான புஜாரா (Pujara) பேசுகையில், 'கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தோம். அதற்காக இந்திய அணியை குறைத்து மதிப்பிட கூடாது. அந்த போட்டி நடைபெற்றது நியூசிலாந்தில் வைத்து தான். தற்போது, இரு அணிகளுக்கும் பொதுவான இங்கிலாந்து மைதானத்தில் தான் போட்டி நடக்கிறது.

இதில் யாருக்கும் ஹோம் அட்வான்டேஜ் இல்லை. இதனால், பலம் வாய்ந்த அணியாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இந்திய அணி அனைத்து துறையிலும் தற்போது சிறப்பாக இருக்கிறது. எப்படிப்பட்ட அணியையும் வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள், மிகவும் பலம் வாய்ந்தவர்கள்.


அவர்களின் பந்து வீச்சை ஏற்கனவே நாங்கள் சந்தித்துள்ளோம். இதனால், அவர்களுக்கு எதிராக எங்களால் ரன்களைக் குவிக்க முடியும். அதே போல, சமீப காலமாகவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களிலும் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது.

எங்களது அணியின் தன்னம்பிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் உயர் தர வீரர்கள் எங்களிடம் உள்ளனர். எங்களது திட்டத்தை சிறப்பாக நாங்கள் தீட்டினால், நிச்சயம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்' என மிகவும் உறுதியுடன் புஜாரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்