‘உலகக்கோப்பையில் இவர ரொம்ப மிஸ் பண்ண போறீங்க’.. பிரபல வீரர் குறித்து கூறிய கங்குலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 -தேதி முதல் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதனால் பல்வேறு நாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களும் உலகக்கோப்பைக்கான பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு போன்ற வீரர்கள் இடம்பெறாதது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,‘உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்டின் முக்கியத்துவத்தை இந்தியா மிகவும் மிஸ் பண்ணும். எந்த இடத்தில் என்பதை உறுதியாக சொல்லமுடியவில்லை’ என கூறியுள்ளார். மேலும்  காயம் அடைந்துள்ள கேதர் ஜாதவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி, ‘அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெறுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது குறித்து எதுவும் என்னால் இப்போது கூறமுடியாது. ஆனால் கேதர் காயம் குணமடைந்து மீண்டும் வருவார் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி அணி சார்பாக விளையாடியுள்ளார். மேலும் அந்த அணிக்கு கங்குலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் ஆகிய இருவரும் பயிற்சியாளர்களாக இருந்தனர். இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் இந்த சீசனில்தான் டெல்லி அணி முதல் முறையாக ப்ளே ஆப்பில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ICCWORLDCUP2019, TEAMINDIA, GANGULY, RISHABHPANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்