"அந்த ஒரு 'பெரிய ஆப்பு' இருக்கு!.. அது அவருக்கே புரியும்!".. இந்திய அணியை விமர்சித்த ரணதுங்காவை... வெளுத்து வாங்கிய பாகிஸ்தான் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய 'ஏ' அணியுடன் விளையாடுவதை தரக்குறைவாக பேசிய அர்ஜுனா ரணதுங்காவை பாகிஸ்தான் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"அந்த ஒரு 'பெரிய ஆப்பு' இருக்கு!.. அது அவருக்கே புரியும்!".. இந்திய அணியை விமர்சித்த ரணதுங்காவை... வெளுத்து வாங்கிய பாகிஸ்தான் வீரர்!

இளம் படையை கொண்ட இந்திய 'ஏ' அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்காக ஷிகர் தவான் தலைமையில் இலங்கை சென்றுள்ள 20 பேர் கொண்ட இந்திய அணி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி கொழும்புவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை முன்னாள் விரர் ரணதுங்கா சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்தார். அதாவது, 'இந்தியாவின் இராண்டாம் தர அணியுடன் இலங்கை அணி மோதுவதா'? இது இலங்கை கிரிக்கெட்டிற்கே அவமானம் எனக் கூறியிருந்தார். 

ரணதுங்காவின் இந்த கருத்து குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முக்கியமாக இலங்கை வாரியமே இதற்கு பதிலடி கொடுத்திருந்தது. அதில், 20 பேர் கொண்ட இந்திய அணியில் 14 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் தான், 6 பேர் மட்டுமே அறிமுக வீரர்கள். எனவே, ரணதுங்கா கருத்து சொல்ல தேவையில்லை என்பது போல கூறியிருந்தது. ஆனாலும் ரணதுங்கா தனது கருத்தில் இருந்து பின் வாங்கவில்லை. 

இந்நிலையில், இந்த சர்ச்சையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ரணதுங்கா ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். உலகில் 50 - 60 சிறந்த வீரர்களை வைத்திருக்கும் ஒரே நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவால் ஒரே நேரத்தில் 2 அணிகளை விளையாட வைக்க முடியும். அதிலும் இலங்கை தொடரில், ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா போன்ற சிறந்த சர்வதேச வீரர்கள் உள்ளனர். 

உங்களின் இந்த கருத்து வருத்தம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் மிகப்பெரும் பெயரை சம்பாதித்த ரணதுங்கா, இந்த கருத்தால் கெட்ட பெயரை வாங்கிவிட்டார். இலங்கை அணி தற்போது மோசமான நிலையில் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மறந்ததை போன்று செயல்பட்டு வருகிறது. தற்போது இந்திய தொடரால் தான் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு வருமானம் வரவுள்ளது. எனவே இந்திய அணியின் பலத்தை ரணதுங்கா புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி பாடம் கற்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்