'வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் கலக்கல்’... ‘ஆரம்பித்து, முடித்து வைத்த தமிழக வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அமெரிக்காவில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

சனிக்கிழமை இரவு, ஃபுளோரிடாவின் லாடெர்ஹில்லில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரை வீசினார். இதில் 2-வது பந்திலேயே க்ருணால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினர் கேம்ப்பெல். அதன்பிறகு அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. பின்னர் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில், ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஷிகார் தவான் 1(7) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா 24(25) ரன்களும், ரிஷப் பந்த் (0) ரன் ஏதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக மணிஷ் பாண்டே 19(14) ரன்களும், அவரைத்தொடர்ந்து விராட் கோலி 19(29) ரன்களும், அடுத்து களமிறங்கிய க்ருணால் பாண்ட்யா 12(14) ரன்களும் எடுத்து வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா 10(9) ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 8(5) ஒரு சிக்சர் அடிக்க இந்திய அணி 17.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்களும் எடுத்து 98 ரன்கள் எடுத்தது. தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் முதலில் விக்கெட் வீழ்த்தி, கடைசியாக சிக்சருடன் முடித்தார்.

WASHINGTONSUNDAR, WESTINDIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்