இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் T20 போட்டிகள்.. சூடு பிடிக்கும் டிக்கெட் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

Advertising
>
Advertising

Also Read | "நீ ஒடச்சியே அதோட மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?".. காதலியோட சண்டை போட்டுட்டு மியூசியத்துக்குள்ள போன காதலன்.. பதறிப்போன போலீஸ்..!

டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், கட்டாக் பாராபதி ஸ்டேடியம், விசாகபட்டினம் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஏசிஏ விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியம், ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் மற்றும் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் ஆகிய மைதனாங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. 15ல் இந்தியா ஒன்பது முறையும், தென்னாப்பிரிக்கா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.  தென்னாப்பிரிக்கா இந்தியாவில் இரண்டு டி20 தொடர்களில் விளையாடியுள்ளது. முதல் தொடர் அக்டோபர், 2015 இல் நடந்தது. முறையே தர்மசாலா மற்றும் கட்டாக்கில் நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றியது. கொல்கத்தாவில் நடக்க இருந்த மூன்றாவது போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இரண்டாவது டி20 தொடர் 2018 செப்டம்பரில் நடந்தது. இந்தத் தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. முதல் டி20 ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. டெல்லியில்  நடைபெறும் Paytm T20I டிராபி - 1st T20I போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக உள்ளது. ஜூன் 9 ஆம் தேதி புது தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இதற்கான டிக்கெட் விறபனை துவங்கியுள்ளது. 600 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை இந்த தொடருக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

இதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும், கவுண்ட்டர் முன்பதிவும் துவங்கியுள்ளது. கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) எம் சின்னசாமி மைதானத்தில் 5வது டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனையை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகளின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.750 முதல் ரூ.20,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெங்களூரு மைதானம் டி20 போட்டியை நடத்துகிறது.

Also Read | "அது பாம்பு இல்ல".. வீட்டில் பாம்புடன் வசித்து வரும் பெண் சொன்ன 'அதிர வைக்கும்' பதில்..!

CRICKET, INDIA VS SOUTH AFRICA, INDIA VS SOUTH AFRICA T20 MATCH, T20 MATCH TICKETS, இந்தியா - தென் ஆப்ரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்