மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. வெளியான போட்டி அட்டவணை! எந்த தேதி - கிரவுண்ட் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மீண்டும் மோத உள்ளன.

Advertising
>
Advertising

நவம்பர் 11 மும்பை தாகுதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவே இல்லை. ஆனால் அதே வேளையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் நேருக்கு நேர் மொதி வருகின்றன. குறிப்பாக 50 ஓவர், 20 ஓவர் உலககோப்பைகளில் தொடர்ந்து மோதி வருகின்றன.  ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிரிக்கெட் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஆறு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, அதில் ஐந்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 23 அன்று, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 2022 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் இரண்டாம் தொடக்க ஆட்டத்தில் எதிர்பார்ப்புள்ள போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. சூப்பர் 12 குரூப் பி பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் இடம் பிடித்துள்ளன. இந்தியா பாகிஸ்தான் மோதலில் எல்லா நேரத்திலும் உணர்ச்சி மயமாக இருக்கும்.

வெளியானது இந்த வருட T20 உலககோப்பை போட்டி அட்டவணை.. இந்தியாக்கு வாய்ப்பிருக்கா? யார் யார் கூட மேட்ச் இருக்கு? முழு தகவல்

 

இரு அணிகளும் பல ஆண்டுகளாக உலக அரங்கில் சில ஹை-ஆக்டேன் மோதல்களைக் கொண்டுள்ளன, பாபர் ஆசாமின் பாகிஸ்தான் அணி, 2021 துபாயில்  நடந்த உலககோப்பையில் இந்தியாவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, இப்போது வலுக்கட்டாயமாக பதிலடி கொடுக்க ஆர்வமாக உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இப்போட்டிக்கு 1,00,000 பார்வையாளர்கள் வருவார்கள் என மெல்போர்ன் மைதான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2022ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டிகள், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகின்றன. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த உலககோப்பை தொடர், வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை இந்த உலககோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது.  ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான அடிலெய்டு (OVAL) , பிரிஸ்பேன் (GABBA), ஹோபார்ட், மெல்போர்ன் (MCG), பெர்த் (opus) மற்றும் சிட்னி (SCG) உள்ளிட்ட இடங்களிலும், கீலாங் நகரிலும் உலககோப்பை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரதான முக்கிய போட்டிகள் கீலாங் மைதானத்தில் நடைபெறாது.

லிஸ்ட்ல இடம்பிடித்த 3 இந்திய வீரர்கள்.. ஆனா ‘கோலி’ பெயர் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஐசிசி..!

 

நவம்பர் 9 அன்று முதல் அரையிறுதிப்போட்டியும் நவம்பர் 10 அன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிருதி அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.  இறுதிப் போட்டி நவம்பர் 13ந்தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDIA, PAKISTAN, INDIA VS PAKISTAN MATCH, ICC, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்